விளாத்திகுளம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
விளாத்திகுளம் அருகே தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமம் கிழக்குத் தெருவை சேர்ந்த ராமன் மகன் கருப்பசாமி (வயது 56). இவர் விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் மகன் மும்மூர்த்தியுடன் ஆற்றங்கரை கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு மதுகுடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டில் இருந்த கருப்பசாமியை வேலைக்கு செல்லுமாறு மகன் கூறினாராம். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட கருப்பசாமி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.