2003 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்
2003 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தேசிய அளவிலான நீட் நுழைவு தேர்வு ராமநாதபுரத்தில் இன்று நடைபெறுகிறது. ராமநாதபுரம் முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளி, கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி, ஷிபான் நூர் குளோபல் அகாடமி பள்ளி, வேலுமாணிக்கம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி ஆகிய 5 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2003 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இன்று தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வருபவர்கள் காலை 10 மணிக்கு வர வேண்டும். உரிய பரிசோதனைக்கு பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படையினர் மற்றும் 100 தேர்வு மைய கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.