கோடை சீசனுக்கு தயாராகும் நேரு பூங்கா


கோடை சீசனுக்கு தயாராகும் நேரு பூங்கா
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் கோடை சீசனுக்கு ேநரு பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு புதிய விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் கோடை சீசனுக்கு ேநரு பூங்கா தயார்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு புதிய விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மலர் நாற்றுகள்

கோத்தகிரியில் நேரு பூங்கா முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. பூங்காவில் அழகிய புல்வெளிகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் இன மக்களின் கோவில் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழாவையொட்டி காய்கறி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதனை கண்டு ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக பூங்கா திகழ்கிறது.

இந்தநிலையில் வருகிற கோடை சீசனுக்கு பூங்காவை தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு பூங்காவை மேம்படுத்த ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து வனவிலங்குகள் பூங்காவிற்குள் நுழையாத வண்ணம் சுற்றுச்சுவர் கட்டும் பணிமுடிவடைந்து, தற்போது வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. வண்ண விளக்குகளுடன் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. கோடை சீசனையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் பூங்காவில் 40,000 மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.

விளையாட்டு உபகரணங்கள்

இதனால் மலர் பாத்திகளில் மண்ணுடன், இயற்கை உரத்தை கலந்து பாத்திகளை தயார் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூங்கா கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு, சுவர்களில் வனவிலங்குகளின் தத்ரூபமான ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மேலும் பணியாளர்கள் புல்வெளிகளில் அதிகமாக வளர்ந்துள்ள புற்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்றி சமப்படுத்தி வருகின்றனர்.

பூங்கா நுழைவுவாயிலில் டிக்கெட் கவுன்டர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் பழுதடைந்து இருந்த விளையாட்டு உபகரணங்கள் ஏற்கனவே அகற்றப்பட்டது. தற்போது சிறுவர்களை கவரும் வகையில் 7 விதமான புதிய விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடை சீசனுக்குள் பூங்கா புதுப்பொலிவு பெற உள்ளது. அப்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளை பூங்கா கவர இருக்கிறது.


Next Story