நெல்லை: ஆட்டோ கவிழ்ந்து 5 வயது சிறுவன் உயிரிழப்பு


நெல்லை:  ஆட்டோ கவிழ்ந்து  5 வயது சிறுவன் உயிரிழப்பு
x
தினத்தந்தி 27 Jun 2022 11:05 AM IST (Updated: 27 Jun 2022 11:11 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே ஆட்டோ கவிழந்து விபத்துக்கு உள்ளானதில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம், வெட்டியபந்தியில் இருந்து இன்று காலை தனியார்பள்ளி மாணவர்கள் 6 பேரை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோ வசவப்புரம்-செய்துங்கநல்லூர் சாலையில் அனவரதநல்லூர் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த எல்.கே.ஜி மாணவன் செல்வ நவீன் (வயது 5) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 5 பேரும் ஆட்டோவிற்கு அடியில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story