நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ பொறுப்பேற்பு
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக ஜெயஸ்ரீ பொறுப்பேற்றுக் கொண்டார்.
நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த பெருமாள், திருச்சி ஆவின் பொது மேலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஜெயஸ்ரீ நெல்லை மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
2010-ம் ஆண்டு குரூப்-1 தேர்ச்சி பெற்ற ஜெயஸ்ரீ, வேலூர் உதவி கலெக்டர், திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), மதுரை ஆவின் பொது மேலாளர், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஸ்ரீரங்கம் தேசிய சட்டப்பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டார். நெல்லை மாவட்ட புதிய வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீக்கு அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.