நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி புதிய டீன் ரேவதி பொறுப்பேற்பு
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி புதிய டீனாக ரேவதி பொறுப்பேற்றார்.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியின் முதல்வராக பணியாற்றிய டாக்டர் ரவிசந்திரனின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து துணை முதல்வராக இருந்த டாக்டர் சுரேஷ் பொறுப்பு முதல்வராக பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட அரசு ஆஸ்பத்திரி முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் ரேவதி, நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் டாக்டர் ரேவதி புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் துணை முதல்வராக பணியாற்றியவர். அதன்பின்னர் உதவி உயர்வு பெற்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு முதல்வராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முதல்வராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.