நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும்; பயணிகள் வலியுறுத்தல்


நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும்; பயணிகள் வலியுறுத்தல்
x

நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில் சேவையை நிரந்தரமாக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

நெல்லை -தாம்பரம் ரெயில்

ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயில் இரவு 7 மணிக்கு பதிலாக 7.20 மணிக்கு புறப்படும் வகையில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாம்பரம் சென்றடையும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம்போல் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கே சென்றடையும்.

நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு 14 மணி நேரம் பயணித்து, மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் தாம்பரம் - நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் திங்கள் கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு, 12.20 மணி நேரம் பயணித்து மறுநாள் காலை 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பை வந்தடைகிறது.

புதிய நேரம்

புதிய அட்டவணையின் படி நெல்லையில் இருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு, சேரன்மகாதேவி 7.43 மணி, அம்பை 8 மணி, கடையம் 8.15, பாவூர்சத்திரம் 8.32, தென்காசி 9.20, ராஜபாளையம் 10.20, ஸ்ரீவில்லிபுத்தூர் 10.34, சிவகாசி 10.52, விருதுநகர் 11.35, மதுரை நள்ளிரவு 1.20 மணிக்கு சென்று தாம்பரத்தை காலை 9.20 மணிக்கு சென்றடைகிறது.

இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில், ''நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலின் பயண நேரம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த ரெயில் காலை 8 மணிக்குள் தாம்பரத்தை சென்றடையும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.

மேலும் இந்த ரெயில் சேவை அடுத்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைய இருப்பதால், இந்த சேவையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதுடன், நிரந்தரமாகவும் இயக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story