நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம்


நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம்
x

நெல்லிக்குப்பத்தில் நகராட்சி கூட்டம் நடந்தது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. இதற்கு நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழியை கவுன்சிலர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு பேசினர். இதையடுத்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதிலளித்து கூறுகையில், நகராட்சியில் புதிதாக பொறுப்பேற்று இரண்டு மாதம் முடிவடைந்த நிலையில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் முழுவீச்சில் செய்து வருகின்றோம். மேலும் நகராட்சி பகுதியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது மட்டுமின்றி அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல், பொறியாளர் பாண்டு, மேலாளர் அண்ணாதுரை, பணி மேற்பார்வையாளர் வாசு, இளநிலை உதவியாளர் பாபு மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story