நெல்லிவனநாதர் கோவில் குடமுழுக்கு


நெல்லிவனநாதர் கோவில் குடமுழுக்கு
x

கோட்டூர் அருகே திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் கோவில் குடமுழுக்கு 7,8-ந் தேதிகளில் நடக்கிறது.

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் கோவில் குடமுழுக்கு 7,8-ந் தேதிகளில் நடக்கிறது.

நெல்லிவனநாதர் கோவில்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் கோட்டூர் ஒன்றியம் திருநெல்லிக் காவல் கிராமத்தில் மங்களாம்பிகை சமேத நெல்லிவனநாதர் கோவில் உள்ளது. இத்தலத்தில் திருமால், பிரம்மன், சூரியன், சந்திரன், சனி,பிறதேவர்கள் இறைவனை வழிபட்டு சாப விமோசம் பெற்றதும், உத்தமசோழன் பிரதோஷ காலத்தில் வேண்டி அம்பிகையையே குழந்தையாக பெற்றதும் வரலாறு.

இந்த கோவிலில் மாசி மாதம் 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 7 நாட்கள் மாலையில் சூரிய பகவான் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுந்து சூரிய வழிபாடு நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.

திருப்பணிகள்

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவடைந்ததையொட்டி நெல்லிவனநாதர் கோவில் குடமுழுக்கு வருகிற 7-ந்தேதி(புதன்கிழமை) மற்றும் 8-ந்தேதி(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

குடமுழுக்கையொட்டி நேற்று முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், தனபூஜை, கணபதி ேஹாமம், கோ பூஜை உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன.

குடமுழுக்கு

வருகிற 7-ந்தேதி காலை 9 மணி அளவில் கிராம தெய்வங்களாகிய அய்யனார், வீரன், பிடாரி, பெரியாச்சி, தொண்டி வீரன், சூரியன், வரசித்தி விநாயகர், ெரயிலடி மங்கள விநாயகர், முருகன், ஐயப்பன், மஞ்சள் மாதா, ஆஞ்சநேயர் கோவில்களிலும் குடமுழுக்கு நடக்கிறது.

இதையடுத்து மறுநாள் 8-ந் தேதி காலை 10.30 மணி அளவில் மங்களாம்பிகை சமேத நெல்லிவனநாதர் கோவிலில் குடமுழுக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ஆரோக்கியமதன், செயல் அலுவலர் சீனிவாசன், திருப்பணி முயற்சியாளர்கள், கிராம மக்கள், ஆன்மிக நண்பர்கள், சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story