பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கும் பணி


பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கும் பணி
x
தினத்தந்தி 28 July 2023 1:30 AM IST (Updated: 28 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பறவைகளுக்கான குறுங்காடு அமைக்கும் பணி நடை பெற்றது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில், தன்னார்வ அமைப்புடன் இணைந்து பறவைகளுக்கான குறுங்காடு அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து உத்தமபாளையத்தை சேர்ந்த நன்செய் தன்னார்வ அமைப்பின் மூலம் குறுங்காடு அமைப்பதற்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட குழிகள் நெருக்கமாக தோண்டப்பட்டன. அவற்றில் எரு உரம் போட்டு சொட்டுநீர்ப்பாசனம் அமைக்கப்பட்டது. நேற்று அங்கு 150-க்கும் மேற்பட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன.

மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், தன்னார்வலர்கள் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் முத்துத்தேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குழுவினரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். நாவல், கொடுக்காப்புளி, இலுப்பை மற்றும் புங்கை, நீர்மருது, சிவகுண்டலம் போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன. சொட்டுநீர் பாசனம் மூலம் மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் என்பதால் அவை வேகமாக வளர்ந்து மரமாகும் என்றும், எதிர்காலத்தில் பறவைகளின் வசிப்பிடமாக திகழும் வகையில் இந்த குறுங்காடு மாறும் என்றும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story