நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
மாவட்டம் முழுவதும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை மகாராஜநகரில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் அப்துல் ஜப்பார், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், புல்லட் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசுகள் நேதாஜி பிறந்த நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திருவள்ளுவர் உருவச்சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அம்பை
அம்பை பூக்கடை பஜாரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பிரபாகரன், கே.கே.சி.பிரபாகரன், அம்பை யூனியன் தலைவர் பரணிசேகர், வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்வசூடாமணி, வக்கீல் சங்க தலைவர் கந்தசாமி, அரசு வக்கீல் காந்திமதிநாதன், பார்வேர்டு பிளாக் மாவட்ட இளைஞரணி செயலாளர் பேச்சிமுத்து, மூ.மு.க. மாவட்ட செயலாளர் துரைபாண்டியன், பா.ஜ.க. ராமராஜ் பாண்டியன், சண்முகபிரகாஷ், நேதாஜி சுபாஷ் சேனை தங்கமாரி உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்.
வள்ளியூர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவையொட்டி, வள்ளியூர் பஸ் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு ஞானதிரவியம் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வள்ளியூர் பேரூராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நெல்லை தொகுதி எம்.பி. ஞானதிரவியம் தொடங்கி வைத்தார்.
அதன்படி வள்ளியூர் பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சேனையர் தெரு மற்றும் யாதவர் நடுத்தெருவில் பல்நோக்கு சேவை மைய கட்டிடம் அமைக்கும் பணி, ராமகிருஷ்ணாபுரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகளை ஞானதிரவியம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
வள்ளியூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொ.மு.ச. சார்பில் தி.மு.க. கொடியேற்றினார்.
விழாவில் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், தி.மு.க. மாநில மீனவரணி துணை அமைப்பாளர் எரிக் ஜூட், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளரும், கிழக்கு மாவட்ட துணை செயலாளருமான நம்பி, வள்ளியூர் பேரூர் செயலாளர் சேதுராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜாவித், இந்திய கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மல்லிகா அருள், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாடசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பா.ஜ.க.வினர் நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுச்செயலாளர் பாபுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.