நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது. பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர துணை செயலாளர் மாரியப்பன், மூத்த உறுப்பினர் சந்திரன், மாணவரணி சங்கர், பார்வர்டு பிளாக் கட்சி மேல நீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகசாமி, நகர செயலாளர் முத்துப்பாண்டியன், தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.