நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தலைவர் கைது


நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தலைவர் கைது
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தலைவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூரில் கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு பிரிவினைச் சேர்ந்த சிலரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரியும், கொடிக்கம்பம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும், ஊர் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் மேலப்பாவூரைச் சேர்ந்த பொதுமக்கள் 2-வது நாளாக அங்குள்ள தங்கம்மன் கோவில் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நெல்லையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வருகை தந்த நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு நிறுவனத்தலைவர் மகாராஜன் மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மகாராஜனை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க போலீசார் வேனில் அழைத்து வந்தனர். அப்போது சுபாஷ் சேனை அமைப்பினர் பாளையங்கோட்டை சிறை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story