மூலனூர் வட்டார விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்


மூலனூர் வட்டார விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்
x

மூலனூர் வட்டார விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் அறிமுகம்

திருப்பூர்

மூலனூர்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில் அரசு துறையை ஒருங்கிணைத்து மத்திய அரசு புதிய இணையதளத்தில் விவசாயிகளின் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேளாண் அடுக்குத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது அனைத்து விவசாயிகளும் அனைத்து திட்டங்களும் இணைந்து பயன் கிடைக்கும் வகையில் "கிரேன்ஸ்' (Grover online registration of agricultural input system) என்ற இணையதளத்தில் விவசாயிகள் தங்களின் நில உடமை விவரம் ஆதார் ரேஷன் கார்டு வங்கி கணக்கு விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வருவாய்த்துறை வேளாண்துறை தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட அலுவலர்களால் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது இதன் மூலம் 13 துறைகளில் வழங்கப்படும் மத்திய மாநில அரசுகளின் மானிய திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு முறையும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை எனவே முகநூல் வட்டார விவசாயிகள் தங்களுடைய வருவாய்த்துறை வேளாண் துறை தோட்டக்கலைத்துறை அலுவலர்களின் நில உடமை விவரம் சிட்டா நகல் ஆதார் நகல் குடும்ப அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக நகல் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கைபேசி எண் ஆகிய விவரங்களுடன் அனுகி வேளாண்மை அடுக்குத்திட்ட இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு மூலனூர் வேளாண்மை உதவி இயக்குனர் நிர்மலா கூறியிருந்தார்



Next Story