திருச்சி விமான நிலையத்துக்கு புதிய ஆம்புலன்ஸ்


திருச்சி விமான நிலையத்துக்கு புதிய ஆம்புலன்ஸ்
x

திருச்சி விமான நிலையத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி


திருச்சி விமான நிலையத்தில் 2 ஆம்புலன்சுகள் விமான நிலைய அலுவலக பயன்பாட்டிற்காக இயங்கி வந்தது. இந்த ஆம்புலன்சுகளின் சேவை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து புதிதாக 2 ஆம்புலன்சுகள் வாங்குவதற்காக ரூ.32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2 ஆம்புலன்சுகள் வாங்கப்பட்டு நேற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இந்த ஆம்புலன்ஸ் சேவையை திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story