கடையநல்லூரில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
கடையநல்லூரில் புதிய ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் காவா அறக்கட்டளை சார்பில் அனைத்து சமுதாய மக்கள் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன், என்ஜினீயர் ஹூசைன், யாகூப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் ஜாபர் சாதிக் அனைவரையும் வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன், கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அனிதா பாலின், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, முன்னாள் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், மாவட்ட பொருளாளர் முகமது செரீப், நகர செயலாளர் அப்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.