ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
எட்டயபுரம் அருகே ரூ.11 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள சுரைக்காய்பட்டி பஞ்சாயத்து குளத்துவாய்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து எட்டயபுரம் அருகே உள்ள டி.சண்முகபுரம் கிராமத்தில் தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீத கண்ணன், கோவில்பட்டி ஒன்றிய தலைவர் கஸ்தூரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசகன், சுப்புலட்சுமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் உள்பட பஞ்சாயத்து தலைவர்கள், கிளைச் செயலாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.