படுக்கப்பத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

படுக்கப்பத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை   ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-23T00:16:24+05:30)

படுக்கப்பத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்தில் குழந்தை வளர்ச்சி திட்டத்தில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு படுக்கப்பத்து ஊராட்சித் தலைவர் தனலட்சுமிசரவணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயா வரவேற்றார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

இதில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், தெற்கு வட்டாரத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story