புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்


புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே உள்ள திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோருக்கான குறித்து புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு கற்றுத்தரும் இந்த திட்டம் தொடர்பாக ஊர்வலத்தின்போது விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு வட்டார கல்வி அலுவலர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழரசி, ராஜேந்திரன், கோவி நடராஜன், ஐசக்ஞானராஜ், சிவசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் கவிதா நன்றி கூறினார்.


Next Story