மண்ணி ஆற்றில் புதிய பாலம்


மண்ணி ஆற்றில்  புதிய பாலம்
x

பந்தநல்லூர் அருகே மண்ணி ஆற்றில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்,

பந்தநல்லூர் அருகே மண்ணி ஆற்றில் ரூ.1¾ ேகாடியில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாலத்தில் விரிசல்

பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப்பாலம் உள்ளது. கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் திடீரென ஒரு தூண் உள்வாங்கியது. இதனால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. எனவே இரு புறமும் கனரக வாகனங்கள் செல்ல கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். தற்போது பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் வழி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

புதிய பாலம்

இதனால் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் நேற்று திருப்பனந்தாள் ஒன்றியக்குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணைத்தலைவர் கோ.க. அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், என்ஜினீயர் ரவி ஆகியோர் பழுதடைந்த பாலத்தை ஆய்வு செய்தனர். அதன் பின்னர் நபார்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 72 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பரிந்துரை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு திட்ட மதிப்பீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்தில் மண், நீர் நிலை ஆய்வு பணிகளை அதிகாரிகள் செய்துவருவதாக ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.


Next Story