மாட்டுத்தாவணியில் புதிய பாலம் பணியை விரைவாக முடிக்கக்கோரி வழக்கு


மாட்டுத்தாவணியில் புதிய பாலம் பணியை விரைவாக முடிக்கக்கோரி வழக்கு
x

மாட்டுத்தாவணியில் புதிய பாலம் பணியை விரைவாக முடிக்கக்கோரி வழக்கு ெதாடரப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் பாலசந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள லேக் ஏரியா பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். டி.டி.சி நகர் நுழைவுப் பகுதியில் 37 ஆண்டு பழமையான பாலம் உள்ளது. இந்தப் பாலம் வழியாகத்தான் மதுரை-மேலூர் சாலையில் சாத்தையாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் கால்வாய் மூலம் கடந்து செல்கிறது. கடந்த 1985-ம் ஆன்டு கட்டப்பட்ட இந்த பாலம் பலம் இழந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் வெள்ளநீர் தடைபட்டு பாலத்தின் இருபுறமும் குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளதால் எந்த நேரமும் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்தப் பகுதி முழுவதும் வெள்ளக் காடானது. வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, லேக் ஏரியா நுழைவு வாயில் பகுதியில் மதுரை-மேலூர் மெயின் ரோட்டில் தெற்கு பகுதியில் புதிய பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story