அரசு பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டிடம்; மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
விளாத்திகுளம் அருகே அரசு பள்ளியில் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டிடத்துக்கு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே புதூர் சின்னவநாயக்கப்பட்டியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதறகு சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதன்படி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, அன்புராஜன், பேரூர் செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ஞானகுருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story