ரூ.1¼ கோடியில் புதிய கட்டிடம்
ரூ.1¼ கோடியில் புதிய கட்டிடம்
அனுப்பர்பாளையம்
திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி அங்கு ரூ.1 கோடியே 30 லட்சத்தில் 4 ஆயிரத்து 500 சதுரஅடி பரப்பளவில், 3 தளங்களுடன் போலீஸ் நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று காலை நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதே நேரம் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ஆகியோர் புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி, கட்டிடத்தை பார்வையிட்டனர். திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய புதிய கட்டிடத்தில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம், கொங்குநகர் போக்குவரத்து போலீஸ் அலுவலகம், அலுவலர்கள் ஓய்வு அறை உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட உள்ளன. திறப்பு விழா நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார்,திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அபினவ்குமார், வனிதா, உதவி கமிஷனர்கள் நல்லசிவம், அனில்குமார், ராஜன், திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.