ரூ.29 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
ரூ.29 லட்சத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு புதிய கட்டிடம்
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் தெற்குகாட்டில் ரூ.28.94 லட்சம் செலவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் நடைபெற்றது. புதிய கட்டிடத்தை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆத்மா குழு உறுப்பினர்கள் உதயம், முருகையன், சதாசிவம், மகாகுமார், வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் பாதுகாப்பிற்காக கருப்பம் புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் தனது சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 6 கண்காணிப்பு கேமராவும், இன்வெர்ட்டர் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். முன்னதாக கலைஞரின் நினைவு சின்னமாக சென்னையில் கட்டப்பட உள்ள பேனாவின் நினைவுச்சின்னத்தை கவுதமனுக்கு, சுப்புராமன் வழங்கினார்.