ரூ.50 லட்சத்தில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்
நாகையில் ரூ.50 லட்சத்தில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நாகையில் ரூ.50 லட்சத்தில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நகர்புற நல வாழ்வு மையங்கள்
நாகை சாமந்தான்பேட்டை மற்றும் பழந்தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி நகர்ப்புற நல்வாழ்வு மையத்தின் சிகிச்சை பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ரூ.50 லட்சம் மதிப்பீட்டில்...
நாகையில் சாமந்தான்பேட்டை, பழந்தெரு ஆகிய 2 இடங்களில் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நகரசபை தலைவர் மாரிமுத்து வரவேற்றார். இதில் மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாகத் அலி, நகரசபை உறுப்பினர் அமுதா மோகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.