புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு


புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு
x

திருமருகல் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி;

திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடம், ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்தில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அறைக்கும் ஆலையினையும், ஏனங்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆகியவற்றை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். விழாவில் கலெக்்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.தொடர்ந்து கொத்தமங்கலம் ஊராட்சி மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலா் கலந்து ெகாண்டனர்.


Next Story