புதிய வழித்தடத்தில் பஸ் வசதி
தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை கல்யாணசுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
கும்பகோணம்;
தஞ்சையில் இருந்து திட்டை, திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், கொற்கை வழியாக கும்பகோணத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திட்டை, திருக்கருகாவூர், பட்டீஸ்வரம், கொற்கை வழியாக கும்பகோணத்துக்கு நேற்று மாலை புதிய பஸ் இயக்கி வைக்கப்பட்டது. இதையொட்டி கொற்கை பகுதியில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கல்யாண சுந்தரம் எம்.பி. தலைமை தாங்கி புதிய பஸ்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் இயக்குனர் ராஜ்மோகன், பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.