9 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய கார்


9 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய கார்
x

9 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய கார் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அன்று விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் தமிழகத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கும், அலுவலக பயன்பாட்டிற்கு புதிய கார் கொள்முதல் செய்து வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், அரிமளம், குன்றாண்டார்கோவில், பொன்னமராவதி, புதுக்கோட்டை, விராலிமலை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய 9 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு அலுவலக பயன்பாட்டிற்கு தொடர்புடைய ஊராட்சி ஒன்றியங்களின் பொது நிதியிலிருந்து புதிய கார் கொள்முதல் செய்யப்பட்டது. சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய கார்கள் காணொலியில் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்டத்தில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட 9 புதிய கார்களும் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. இதனை கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


Next Story