புதிய தேர் வெள்ளோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது
ராணிப்பேட்டை
ஆற்காடு
ஆற்காடு ஒன்றியம் கீழ்மின்னல் ஊராட்சி ரத்தினகிரியில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் 30 அடி உயரம் கொண்ட உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேரின் வெள்ளோட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதி நடக்கிறது.
இதனையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து கோவிலில் உள்ள மண்டபத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக அவர் தேரை பார்வையிட்டார்.
கூட்டத்தில் உதவி கலெக்டர் பூங்கொடி, அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர், வாலாஜா தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story