புதிய வகுப்பறை கட்டிடங்கள்; அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்


புதிய வகுப்பறை கட்டிடங்கள்; அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்
x

கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ.வே.அ.வள்ளிமுத்து உயர் நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரம் ஈ.வே.அ.வள்ளிமுத்து உயர் நிலைப்பள்ளியில் 6 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஆர்.வி.எஸ்.வேல் முருகேசன் தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பொது மேலாளர் இன்பமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் துரை வரவேற்றார்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், நமது முதல்-அமைச்சர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் பெரும் அக்கறை எடுத்து வருகிறார். மற்ற துறைகளை விட கல்வி துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்து இருக்கிறார். அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். எனவே பள்ளிக்கு போகாமல் வேலைக்கு செல்வோர் யாரும் இருந்தால் அவர்களை இந்த பள்ளியில் கொண்டுவந்து சேருங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, வட்டார கல்வி அலுவலர்கள் முத்தம்மாள், பத்மாவதி, தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், நகரசபை கவுன்சிலர்கள், முன்னாள் உறவின் முறை சங்க தலைவர்கள் ராஜரத்தினம், சேதுரத்தினம், தொழில் அதிபர் பிரபாகரன், தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் முருகன், நாடார் உறவின்முறை சங்க துணை தலைவர் அழகுவேல், செயலாளர் சண்முகராஜா, பொருளாளர் குமார், துணை செயலாளர் வள்ளியப்ப ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆசிரியர் பொன் செந்தில் விநாயகம் நன்றி கூறினார்.


Next Story