கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, துணை மேயர் ராஜூ, கோவில் நிர்வாக அலுவலர் ஐயர் சிவமணி, நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட 68 கோவில்களை சேர்ந்த 76 அர்ச்சகர்கள் உள்பட 182 பேருக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நெல்லை டவுன் 16-வது வார்டு கண்டியபேரியில் பொங்கல் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் பி.எம்.சரவணன் கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கி, பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். கண்டியபேரி ஆதரவற்ற முதியர் இல்லத்தில் உள்ள 29 முதியோர் மற்றும் அங்குள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் உள்ள 21 பேர் என மொத்தம் 50 பேருக்கு பொங்கல் புத்தாடைகள் வழங்கப்பட்டது. நெல்லை மண்டல சுகாதார அலுவலர் (பொறுப்பு) இளங்கோ மற்றும் சோயா அறக்கட்டளை நிர்வாகி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.