கோவில்பட்டியில் புதிய கல்விக் கொள்கை கருத்துகேட்பு கூட்டம்


கோவில்பட்டியில் புதிய கல்விக் கொள்கை   கருத்துகேட்பு கூட்டம்
x

கோவில்பட்டியில் புதிய கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி மாவட்ட அளவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவில்பட்டி மாவட்ட கல்வி அதிகாரி அ.சின்ன ராசு தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயபால், சமூக ஆர்வலர் வெங்கடம்மாள் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா, நாலாட்டின் புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனி, புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி, செல்வராஜ், சுப்புராஜ், ஆசிரியர் ராமமூர்த்தி, ஓய்வு பெற்ற ஆசிரியர் வெள்ளத்துரை மற்றும் பெற்றோர், கலந்து கொண்டனர். பள்ளி துணை ஆய்வாளர் ப.

சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story