புதிய தொழில்முனைவோர்-தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


புதிய தொழில்முனைவோர்-தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
x

கரூர் மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோர்-தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மானியம் பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

விண்ணப்பிக்கலாம்

படித்த வேலைவாய்ப்பற்ற, முதல் தலைமுறையினரை தொழில் முனைவோராக்கும் பொருட்டு தமிழக அரசு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இதில்குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் விண்ணப்பிக்கலாம், மேலும் இத்திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75லட்சம் ) நிதியுதவி வழங்கப்படும். 3 சதவீத பின்முனை வட்டி மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

கடன் உதவி

தற்போது புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கு உற்பத்தி, சேவை தொழில்களுக்கும் மற்றும் கூடுதலாக வணிக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம், அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை அரசு மானியத்துடன் கடன் உதவிபெற சிறப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற https://msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள மூலமாக விண்ணப்பம் செய்யலாம். அல்லது உரிய ஆவணங்களுடன் தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளளை 04324-255179 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம். மேற்கண்ட தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story