வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு


வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
x

நெல்லை வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை வக்கீல் சங்க தலைவராக ராஜேஸ்வரன், செயலாளராக பரப்பாடி காமராஜ், பொருளாளராக நெல்சன் ஜெபராஜ், துணைத்தலைவராக சீதா, உதவி செயலாளராக பாசறை பரமசிவன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நூலகராக மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்களாக அஜித், சிதம்பரம் சின்னதுரை, இசக்கி, மகாராஜா, முத்துராஜ், பிரேம்குமார், இந்திராதேவி, தமிழ்ச்செல்வி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நெல்லையில் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நேற்று நடந்தது. சங்க முன்னாள் தலைவர் சிவசூரியநாராயணன், முன்னாள் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் புதிய தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் பரப்பாடி காமராஜ், பொருளாளர் நெல்சன் ஜெபராஜ் மற்றும் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்தனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் துணைத்தலைவர் அபுபக்கர், முன்னாள் செயலாளர் மரிய குழந்தை, மூத்த வக்கீல்கள் திருமலையப்பன், பாலகணேசன், சிவசுப்பிரமணியன், கார்மேகம், முன்னாள் அரசு வக்கீல் சிவசங்கரன், வக்கீல்கள் பழனி, வினோத்குமார், விஜயகுமார், தங்கதுரை, அசோக், கிளாஸ்டர் ஆனந்த், ஜான், மணிகண்டன், அருண்குமார், ஜாபர்அலி, கோதண்டராமன், ஜோதிமுருகன், ரமேஷ், ஜெனி, பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story