மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுப்பெண் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் புதுப்பெண் பலி
x

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். கணவர் காயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் பலியானார். கணவர் காயம் அடைந்தார்.

புதுப்பெண்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வீரமலையை சேர்ந்தவர் வேலு. போச்சம்பள்ளியில் தனியார் ஷூ நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது.

இவர்கள் மோட்டார்சைக்கிளில் காவேரிப்பட்டணம் - வேலம்பட்டி சாலையில் கண்ணன்கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்தனர்.. மோட்டார்சைக்கிளை வேலு ஒட்டிச் சென்றார். சங்கீதா பின்னால் அமர்ந்திருந்தார்.

பரிதாப சாவு

அப்போது டவுன் பஸ் ஒன்றை மோட்டார்சைக்கிள் முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் தவறி விழுந்த சங்கீதா மீது பஸ் சக்கரம் ஏறி படுகாயம் அடைந்தார். வேலு காயம் இன்றி தப்பினார்.

அங்கிருந்தவர்கள் சங்கீதாவை மீட்டு காவேரிபட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கீதா பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story