புதிய அரசு பஸ் சேவை


புதிய அரசு பஸ் சேவை
x

உடையநாச்சி கிராமத்திற்கு புதிய அரசு பஸ் சேவையை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்:

தியாகதுருகம் அருகே உடையநாச்சி கிராமத்தில் இருந்து கொங்கராயபாளையம் வழியாக கள்ளக்குறிச்சி வரை தினமும் காலை 8.10 மணிக்கு இயங்கும் வகையில் புதிய அரசு பஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், கிளைமேளாலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி கேசவன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு கொடியசைத்து பஸ் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் உடையநாச்சி கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. அரசு பஸ்சை ஓட்டினார். இந்நிகச்சியில் தியாகதுருகம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், பெருமாள், மாவட்ட பிரதிநிதிகள் கலியன், அப்துல் கபூர், அவைத்தலைவர் சாமிதுரை, துணை செயலாளர்கள் கணேசன், சுப்பு இளங்கோவன், உடையநாச்சி முருகன், துணை தலைவர் பிரதீபா ரகுபதிராஜா, ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கோமதுரை, சின்னதுரை, உடையநாச்சி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.


Next Story