புது மாப்பிள்ளை தற்கொலை - குடி பழக்கத்தை விட சொன்னதால் விபரீத முடிவு


புது மாப்பிள்ளை தற்கொலை - குடி பழக்கத்தை விட சொன்னதால் விபரீத முடிவு
x

விஜயன்

சென்னை அருகே திருமணமான 25 நாட்களில் புது மாப்பிள்ளை துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை:

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயன்(வயது 29). கால் டாக்ஸி டிரைவர். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கடந்த 25 நாட்கள் முன் திருமணம் ஆனது.

இந்த நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டுக்கு விருந்துக்காக சென்று வந்து உள்ளார். அப்போதும் குடிபோதையில் தான் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து விஜயனின் அக்கா "ஏன் அதிகமாய் குடிக்கிறாய், தற்போது திருமணமாகி விட்டது, இனிமேலாவது குடி பழக்கத்தை விடு" என்று கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயன் தனது வீட்டிற்கு வந்து மின்விசிறியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 25 தினங்களில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story