திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் புதிய நூலக கட்டிடம்


திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் புதிய நூலக கட்டிடம்
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமருகலில், 1 ஆண்டுக்கு முன்பு பணி முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் புதிய நூலக கட்டிடம் விரைவில் திறக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில், 1 ஆண்டுக்கு முன்பு பணி முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் புதிய நூலக கட்டிடம் விரைவில் திறக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சேதமடைந்த நூலக கட்டிடம்

திருமருகலில் செல்லியம்மன் கோவில் அருகில் தனியார் கட்டிடத்தில் நூலகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் கட்டிடம் சேதம் அடைந்துள்ளது.

மழைக்காலங்களில் நூலக கட்டிடத்துக்குள் தண்ணீர் கசிந்து புத்தகங்கள் நனைந்து சேதமடைந்து வருகிறது. மின்சார வசதி இல்லாத காரணத்தால் நூலகம் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பாம்பு, பல்லி, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் நுழைந்து அச்சுறுத்தி வருகிறது.

புதிதாக கட்டப்பட்டது

இதன் காரணமாக புதிய நூலகம் கட்ட வேண்டும் என அந்த பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து திருமருகல் சந்தைப்பேட்டை கடை தெரு அருகில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக நூலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நூலகம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெளியூர்களில் உள்ள நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படித்து வருகின்றனர்.

திறக்க வேண்டும்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாணவர்கள் நலன் கருதி உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு திறப்பு விழாவுக்கான காத்திருக்கும் புதிய நூலக கட்டித்தை திறக்க வேண்டும் என அந்த பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story