தேவதானப்பட்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தேவதானப்பட்டி அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தேனி
தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் கயல்விழி (வயது 23). இவருக்கும், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 28) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோபித்துக்கொண்டு கயல்விழி, அ.வாடிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது கயல்விழி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story