கிருஷ்ணாபுரத்தில் புதிய மயானபாதை அமைப்பு


கிருஷ்ணாபுரத்தில் புதிய மயானபாதை அமைப்பு
x

கிருஷ்ணாபுரத்தில் புதிய மயானபாதை அமைக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு இறப்பவர்கள் உடலை ‌ மயானத்திற்கு எடுத்து செல்ல கடந்த பத்து ஆண்டுகளாக சரியான‌பாதை இல்லாததால் கடும் அவதிப்பட்டனர். மயான பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நாகராஜ் மற்றும் மத்திய ஒன்றிய செயலாளர் பூரணச்சந்தர் ஆகியோரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையை ஏற்று மயான பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூரணசந்தர் மயான பாதை அமைக்க அப்பகுதியில் ஆய்வு செய்து உடனடியாக மயான‌தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்‌.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் திருமால், வழக்கறிஞர் உதயகுமார் ஒன்றிய நிர்வாகிகள் எத்திராஜ், பூபாலன், கொடைக்கல் முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளர் தர்மன், கிளைக் செயலாளர்கள், பிரதிநிதிகள் உடனிருந்தனர்.


Next Story