தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டுமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூரில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு, உறுப்பினர் சேர்க்கும் முகாமை தொடங்கி வைத்தார். இதில் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்ய வந்தவர்கள் பெயர், முகவரி, ரேஷன்கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றின் நகல் இணைத்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதேபோல் முசிறி கைகாட்டியில் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது.