அமாவாசை சிறப்பு விமான சுற்றுலா பயணம்
அமாவாசை சிறப்பு சுற்றுலா விமானம்இயக்கப்படுகிறது.
இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலாப்பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் பல சிறப்பு ரெயில், கல்வி சுற்றுலா, விமானப் பயணத் திட்டங்களை வகுத்து இந்தியா முழுவதும் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து மகாலய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து விமானம் மூலம் சிறப்பு யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி மதுரையிலிருந்து விமானம் மூலம் கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற இடங்களுக்கு 6 நாட்கள் பயண கட்டணமாக தலா ஒருவருக்கு ரூ.39 ஆயிரத்து 300 நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு ஆகியவை உள்ளடங்கியவை ஆகும்.
இதே போல் சென்னையில் இருந்து விமானம் மூலம் வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந்தேதி லே லடாக், நுப்ரா, பாங்காங் உள்ளிட்ட இடங்களுக்கு 7 நாட்கள் சுற்றுலா செல்ல ரூ.47 ஆயிரத்து 900 கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசின் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சிறப்பு சுற்றுலா புறப்பட உள்ளது. 2 தவணைகள் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இந்த யாத்திரையில் பங்கு பெறுவது எளிது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு 82879 31974, 82879 32070 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.