ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை; ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்


ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை; ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
x

தருவையில் ரூ.7 லட்சத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் தருவையில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவில் ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

புதிய பயணிகள் நிழற்குடை

நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பாளையங்கோட்டை யூனியன் தருவை மெயின் ரோடு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பாளையங்கோட்டை யூனியன் தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் கலந்துகொண்டு புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எஸ்.பரமசிவ அய்யப்பன், யூனியன் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், பஞ்சாயத்து தலைவர் கவுரிலட்சுமி கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story