புதிய மின் கம்பம் நட்டு மின் கம்பிகள் சீரமைப்பு
ரெட்டிபாளையம் ரோட்டில் புதிய மின் கம்பம் நட்டு மின் கம்பிகள் சீரமைப்பு
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் தம்டமலைகோடி மலை செல்லும் வழியில் ரோட்டில் சில இடங்களில் குறுக்கே தாழ்வான நிலையில் மின் கம்பிகள் இருந்தது.
இதனால் அவ்வழியே வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் நிலை இருந்தது. இதுகுறித்து காட்டுக்காநல்லூர் மின்வாரிய அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் செய்திருந்தனர்.
இதையடுத்து மின் வாரிய அதிகாரிகள் இன்று தாழ்வான நிலையில் இருந்த மின்கம்பிகளை உரிய முறையில் உயர்த்தி கட்ட புதிய மின் கம்பம் நட்டு சீரமைத்தனர்.
நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story