புதிய மின் மாற்றி அமைப்பு
மூலைக்கரைப்பட்டி அருகே புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி ஒன்றியம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள செண்பகராமநல்லூர் பஞ்சாயத்து சேவகன்குளம் கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய டிரான்ஸ்பார்மரை நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி கிராமப்புற செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ செயற்பொறியாளர் ஜெயசீலன், செயற்பொறியாளர் ஆஷா, கட்சி நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், ஜெயபால், பஞ்சாயத்து தலைவர்கள் முருகம்மாள் (செண்பகராமநல்லூர்), முத்து சொர்ணம் (சிங்கனேரி), துணைத்தலைவர் தமிழரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story