சென்னையில் மெட்ரோ வழித்தடம் 3ல் புதிய ரெயில் நிலையங்கள்: ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து


சென்னையில் மெட்ரோ வழித்தடம் 3ல் புதிய ரெயில் நிலையங்கள்:  ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
x

ரெவிகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயிலில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், சென்னையில் மெட்ரோ ரெயில் வழித்தடம் 3ல் புதிய ரெயில் நிலையங்கள் அமைக்க 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன .

ரூ.4,058.20 கோடியில் புதிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்க ரெவிகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது


Next Story