திருச்சியில் ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
திருச்சியில் ரூ.10 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார்
திருச்சி
திருச்சி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திருச்சி மாநகராட்சி 65-வது வார்டுக்குட்பட்ட செம்பட்டு பசுமை நகரில் ரூ.10 லட்சத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. இந்த கடையை நேற்று காலை திருநாவுக்கரசர் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜ், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், தொழிலதிபர் அன்னை வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருச்சி ஜே.கே.நகர், முருங்கப்பேட்டை, சூரியூர் ஆகிய பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைகளையும் அவர் திறந்து வைத்தார். மேலும், திருவளர்ச்சோலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெஞ்ச், டெஸ்க் உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.
Related Tags :
Next Story