புதிய ரேஷன் கடை திறப்பு விழா


புதிய ரேஷன் கடை திறப்பு விழா
x

வலங்கைமான் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது

திருவாரூர்

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே பாப்பாக்குடி ஊராட்சி, நார்த்தாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியுடன் இணைந்த புலவர் நத்தம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. புதிய ரேஷன் கடையை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் அவர் குத்து விளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கே. சங்கர், நீடாமங்கலம் கூட்டுறவு பால் வழங்கும் சங்கத்தலைவர் இளவரசன், நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க தலைவர் செல்வகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் சித்தார்த்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதா விஜயகுமார், ஒன்றிய ஆணையர்கள் கலைச்செல்வன், பொற்செல்வி, ஊராட்சிதலைவர் சசிகலா முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story