களக்காட்டில் புதிய ரேஷன் கடை திறப்பு
களக்காட்டில் புதிய ரேஷன் கடையை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு நகராட்சி அலுவலகம் அருகே ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணிகள் தொடக்க விழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், ஆணையாளர் பார்கவி, களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக களக்காடு தோப்பு தெருவில் ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்.
Related Tags :
Next Story