தெற்கு வள்ளியூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு


தெற்கு வள்ளியூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு
x

தெற்கு வள்ளியூர் ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் யூனியன் லெவிஞ்சிபுரம் ஊராட்சி கைலாசநாதபுரம், விஸ்வநாதபுரம், ஜெய மாதாபுரம், செட்டிகுளம் ஊராட்சி சிவசக்திபுரம், இறுக்கன் துறை ஊராட்சி கொத்தங்குளம், கீழ்குளம், தெற்கு வள்ளியூர் ஊராட்சி செம்பாடு, அச்சம்பாடு ஊராட்சி அச்சம்பாடு ஊர்களில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் லெவிஞ்சிபுரம் ஊராட்சி விஸ்வநாதபுரத்தில் பயணிகள் நிழற்குடை, ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் செட்டிகுளம் ஊராட்சி புதுமனை பள்ளிவாசல் தெருவில் நூலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியதுடன் புதிய டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார்.

செம்பாடு கிராமத்தில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், "அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பெற்றுக்கொள்ள பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். கடம்பன்குளம், செம்பாடு கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி பழுதடைந்துள்ளதால் தற்போது வாடகை கட்டிடத்தில் நடத்தப்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில் வள்ளியூர் யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசிரெகுபால், துணை தலைவர் அன்பு லீலா, வள்ளியூர் பேருராட்சி தலைவர் ராதா, ஆ.திருமாலாபுரம் ஊராட்சி தலைவர் இந்திரா, வார்டு உறுப்பினர் அன்பரசி மற்றும் துணைச் செயலாளர் நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story